இறைவா .....
வருமானம் குறைவானாலும்
வயிறார உணவைக் கொடு..
வாழ்நாள் குறைவானாலும்
நோயில்லா உடலைக் கொடு...
வசதி குறைவானாலும்
நோயில்லா வாழவைக் கொடு ...
உறவுகள் குறைவானாலும்
உயிர் தரும் நட்பைக் கொடு..
படிப்பு குறைவானாலும்
நடிப்பில்லா தொழிலைக் கொடு ..
பணம் குறைவானாலும்
பக்தி செலுத்தும் மனத்தைக் கொடு ...
மலை போல் பணம் இருந்தாலும்
தர்மம் செய்யும் சிந்தைக் கொடு....
வாழ்வில் பல துணைகள் இருந்தாலும் ..
உயிர் துணையாய் இறைவா நீயே இரு...
No comments:
Post a Comment