Thursday, November 29, 2018

சில வார்த்தைகள் ...

சில வார்த்தைகள் ...


  • செலவழித்தது போக மீதியுள்ளதை சேமிக்காதே .. சேமித்தது  போக  மீதமுள்ளதை செலவழி ..
  • சிறுவர்களாய் இருந்தபோது பென்சிலையும் , பெரியவர்களாய்  ஆகும் போது பேனாவையும் உபயோகப்படுத்துகிறோம் ... ஏன் தெரியமா ?.. பென்சிலால் எழுதும் பொது தவறானால் அழிப்பதற்கு ரப்பார் இருக்கும்.
  • ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் இடாதே ...நம் முதலீடும் அப்படி தான்.
  • தேவையில்லா பொருள்களை வாங்கி குவித்தால், விரைவில் தேவையான பொருள்களை விற்க நேரிடும் ....
  • நேர்மை என்ற பரிசு மிகவும் விலைஉயர்ந்தது. அதை எல்லாரிடமும் எதிர்பார்க்காதே .
  • நமக்கு கண்கள் முன்னால் இருப்பது ஏன் தெரியுமா?.. பின்னால் பார்க்க வேண்டியதை விட முன்னால் பார்ப்பது முக்கியம் என்பதல் ....
  • ஆற்றின் ஆழத்தை இரண்டு பாதங்களால்  சோதிக்காதே ...


 

Life...



Life.... some meaning


What is the difference between

I Like You  & I Love You..

Beautifully answered by Buddha ...

" When you like a flower, you just pluck it. But when you love a flower, you water it daily"  ....

 One who understand this, understand life...


Reality of Life....


When you give importance to people, they think you are always free..
But they don't understand that you make yourself available for them..


One book is equal to hundred good friends but one good friend is equal to a library..... said by Abdul Kalam








Saturday, November 24, 2018

புயல் எச்சரிக்கை எண்கள்





புயல் எச்சரிக்கை எண்களுக்கு அர்த்தம் இதுதான்... 

 

 மழை , புயல்,  வெயில் இவையல்லாம் இயற்கையின் அம்சங்கள் . மழை காலங்களில் புயல்எச்சரிக்கை எண்கள் நம் காதுகளில் விழும் வார்த்தைகள். அதற்கு அர்த்தம் பல பேருக்கு தெரியாது . இதோ அதை பற்றிய விவரங்கள் ..உங்கள் பார்வைக்கு....

 

புயல் எச்சரிக்கை எண்கள், புயலின் வேகத்தையும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அறிவிக்கும் ஒரு அளவீடு. இதன் அடிப்படையிலேயே கடலுக்கு செல்லலாமா, வேண்டாமா என மீனவர்கள் முடிவெடுப்பர். இது மீனவர்களுக்கு மட்டுமான எச்சரிக்கை இல்லை, கடற்கரையை ஒட்டியுள்ள அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை. புயல் எச்சரிக்கை எண்கள் மொத்தம் 11.

புயல் எச்சரிக்கை எண் 1: புயல் உருவாவதற்கான வானிலை உள்ளது என அறிவிக்கும் சமிக்ஞை இது. செவ்வக வடிவிலான கூண்டு ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு வெள்ளை நிற விளக்குகள் எரியும். தூரத்தில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இது குறிக்கும். 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் எச்சரிக்கை எண் 2: தூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை இது குறிக்கும். பகலில் செவ்வக கூண்டு செங்குத்தாக ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரியும். 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் எச்சரிக்கை எண் 3: இதில் இருந்துதான் பாதிப்புகள் சிறிது,சிறிதாக தொடங்கும். முதல் இரண்டு எண்களும் தூர அறிவிப்பாக இருக்கும். இது உள்ளூர்களுக்கான முன்னறிவிப்பு. பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்பதற்கான அறிவிப்பு. பகலில் முக்கோண வடிவ கூண்டு தலைகீழாகவும், இரவில் மேலே வெள்ளை விளக்கும், கீழே சிவப்பு விளக்கும் எரியும். 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
  
புயல் எச்சரிக்கை எண் 4:    50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் துறைமுகத்திற்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த ஆபத்து அவ்வளவு தீவிரமாக இருக்காது. அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான சமிக்ஞை பகலில் முக்கோண வடிவ கூண்டு, இரவில் மேலே சிவப்பு, கீழே வெள்ளை விளக்குகள்.
புயல் எச்சரிக்கை எண் 5பகலில் மேலே முக்கோண கூண்டு தலைகீழாகவும், அதற்கு கீழே சீட்டு கட்டிலிருக்கும் டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே இரு வெள்ளை நிற விளக்குகளும், அதற்கு கீழே ஒரு சிவப்பு நிற விளக்கும் எரியும். 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதிலிருந்துதான் அபாயம் தொடங்குகிறது. இதற்கான பொருள் துறைமுகத்தின் இடது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும்.
புயல் எச்சரிக்கை எண் 6:   5ம் எண்ணின் வேகம்தான் இருக்கும். ஆனால் துறைமுகத்தின் வலது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும். பகலில், முக்கோண கூடும் அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூடும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே சிவப்பு விளக்கும், அதற்கு கீழே இரண்டு வெள்ளை நிற விளக்குகளும் எரியும்.
புயல் எச்சரிக்கை எண் 7:   60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதை உணர்த்தும் விதமாக மணல் கடிகார வடிவிலான கூண்டும், அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இதற்கு பொருள் துறைமுகத்தை நெருங்கும் அல்லது கடந்துபோகும் புயலால் துறைமுகத்திற்கு கடுமையான வானிலை ஏற்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதாகும். இரவில் வெள்ளை, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
புயல் எச்சரிக்கை எண் 8:   துறைமுகத்திற்கு இடதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் தலைகீழான முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் வெள்ளை, சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 90 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் எச்சரிக்கை எண் 9:   அதே வேகம்தான் ஆனால் துறைமுகத்திற்கு வலதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
புயல் எச்சரிக்கை எண் 10:   துறைமுகத்திற்கு அருகிலோ அல்லது கடந்துசெல்லக்கூடிய கடும் புயலினால் துறைமுகம் கடு மையான வானிலைக்கு உட்படும். மணல் கடிகார வடிவிலான கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, வெள்ளை, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 120 முதல் 220 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் எச்சரிக்கை எண் 11:   வானிலை எச்சரிக்கை மையத்தோடு இருந்த தகவல்தொடர்பு அற்றுப்போனது. மோசமான வானிலையால், மிக அதிகமான கேடு விளையலாம் என உள்ளூர் அலுவலர்கள் கருதுகின்றனர். என்பதுதான் இதற்கான பொருள். பகலில் மணிக்கூண்டு வடிவிலான கூடு ஏற்றப்படும், இரவில் ஒரேஒரு சிவப்பு விளக்கு மட்டும் எரியும்.

 

Tuesday, September 11, 2018

வேண்டுதல்






இறைவா .....

வருமானம் குறைவானாலும்
வயிறார உணவைக் கொடு..

வாழ்நாள் குறைவானாலும்
நோயில்லா உடலைக் கொடு...

வசதி  குறைவானாலும்
 நோயில்லா வாழவைக் கொடு ...

உறவுகள்  குறைவானாலும்
உயிர் தரும் நட்பைக் கொடு..

படிப்பு  குறைவானாலும்
நடிப்பில்லா தொழிலைக் கொடு ..

பணம்  குறைவானாலும்
பக்தி செலுத்தும் மனத்தைக் கொடு ...

மலை போல் பணம் இருந்தாலும்
தர்மம் செய்யும் சிந்தைக் கொடு....

வாழ்வில் பல துணைகள் இருந்தாலும் ..
உயிர் துணையாய்  இறைவா நீயே இரு...


Tuesday, July 10, 2018

தமிழர்கள்


ஓசோன் 20-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 
ஆனால் 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 
ஓசோன் படலத்தின் படம் மற்றும் அதன் முக்கியத்துவம் அதை எவ்வாறு பாது காக்கவேண்டும் என்பது பற்றியும் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோவிலின் துண்களைத் தட்டினால்
ச ரி க ம ப த நி என்கின்ற சப்த ஸ்வரங்கள் கேட்கின்றன.

திருப்பூரில் குண்டடம் வடுக நாத கோவிலில் , 1000 ஆண்டுகளுக்கு முன்பே
கர்பத்தில் உள்ள குழந்தையின் வடிவங்களை (ஒவ்வொரு மாதத்தில் ) வடித்துள்ளனர்
நம் முன்னோர்கள்.


சென்னை வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர்  சிவன் கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது
சூரிய ஒளி மாலை போல் மூன்று வேளையும் விழும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.
இக் கோயில் 5000 ஆண்டுகள் பழைமையானது.

யாழி எனும் மிருகத்தின் உருவத்தை பல கோயில்களில் காணலாம்.
இதுவும் டைனோஸர் போன்று வாழ்ந்து மறைந்தவை என்று கூறப்படுகிறது .
சில கோவில்களில்   இச்சிலையின் வாயில் உருண்டையான கல் (பந்து போல )
இருக்கும் . இதை  உருட்ட முடியும். ஆனால் உருவ முடியாது.

தஞ்சையில் உள்ள கங்கை கொண்ட சோழ புரம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது .
அக்கோவில் கிணற்றின் அருகில் சிங்க உருவசிலையும்  அதன் முன் வாயிலும் இருக்கும்.
அதன் வழியே உள்ளே சென்றால் கிணறு போன்று அமைப்பு இருக்கிறது. அதில் குளிக்கலாம். ஆனால் வெளியில் இருப்பவருக்கு  தெரியாது. அரச குல பெண்கள் குளிப்பதற்காக கட்டப்பட்டது என்கிறார்கள்.

இதே போல் இக்கோவிலின் கருவறையில் சுவர்களில் மரகத கற்கள் பதித்துள்ளனர். இதனால் வெளியில் வெயில் என்றால் உள்ளே குளிரும். வெளியில் குளிர் மழை என்றால் உள்ளே கதகதப்பாக  இருக்கும்.

இப்போதைய விஞ்ஞான வளர்ச்சியும்,அறிவியலும் எத்தனையோ கட்டிடங்களை கட்டிவிடமுடியும். ஆனால்  1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலையும் , 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய (கரிகாலன்) கல்லணையும் மிஞ்சும் கட்டிடக் கலை இப்போது முடியுமா ?


வாழ்க தமிழ் ! வளர்க தமிழனின் புகழ்!

(சில சேகரிப்புகள்)...

Friday, June 29, 2018

உணவு பழக்கம்- பழமொழி வடிவில்





  • சீரகம் இல்லா உணவு சிறக்காது.
  • தன்  காயம் போக்க வெங்காயம் போதும்.
  • வாழை வாழ வைக்கும்.
  • அவசர சோறு ஆபத்து.
  • இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
  • இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை.
  • இருமலை போக்கும் வெந்தயக்கீரை.
  • உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
  • உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.
  • கல்லீரல் பலம் பெற கொய்யா பழம்.
  • கொழுப்பைக் குறைக்க பன்னீர் திராட்சை.
  • சித்தம் தெளிய வில்வம்.
  • சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.
  • சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.
  • ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
  • தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
  • தேனுடன் இஞ்சி இரத்தத்  தூய்மை .
  • பூண்டில் இருக்கு இன்சுலின்.
  • மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
  • வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
  • வாத நோய் தடுக்க அரைக்கீரை.
  • வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
  • பருமன் குறையமுட்டைகோஸ்.
  • பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
  • குடல் புண் ஆற அகத்திக்கீரை.             ...   வாழ்க நலமுடன்.....

Thursday, June 28, 2018

தெரியாத செய்திகள்






மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக்  குளத்தில்
மீன்கள் வளராது.!

திருவண்ணாமலைத்  திருக்கோவிலில் சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வெளியே
வருவதில்லை. மாறாக, பக்கத்தில் உள்ள திட்டி வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

எல்லாத் தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு சக்கரம் இருக்கும்.
ஆனால் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோயிலில் மட்டும் பெருமாளின் வலது கையில் சங்கு உள்ளது. !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரே இடத்தில் நின்று திரு கோவிந்தராஜப்பெருமாளையும் நடராஜரையும் தரிசிக்க முடியும்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இத்தனை கோபுரங்கள் இல்லை. !


கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் உள்ள திரு ஒப்பிலியப்பன் கோவிலில் ஸ்வாமிக்கு படைக்கும் செய்யும் எந்த உணவிலும் உப்பு சேர்ப்பதில்லை.!

ராமநாதபுரம் ராமேஸ்வரம் சிவன் கோயிலில் பெருமாள் சன்னதியில் கொடுப்பது போல தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. !

ஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. இதை தட்டினால் வெண்கல ஓசை கேட்கிறது.!

ரத்தினகிரி மலை முருகனுக்கு அபிஷேகம்  செய்யப்படும் பால் சிறிது நேரத்தில் தயிராக
மாறிவிடுகிறது. !

மூலவரே திருவீதி உலா வருவது சிதம்பரம் நடராஜர் மட்டுமே.!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் உள்ள கேரளபுரத்தில் சிவபெருமான் கோயில் உள்ளது.இக் கோவிலில் அரசமரத்தடியில் உள்ள பிள்ளையார் நிறம் மாறுபவராக உள்ளார். நிறம் மாறும் சந்திர காந்தக் கல்லினால் உருவாக்கப்பட்டது இச்சிலை. ஆவணி முதல் 6 மாதங்கள் வெள்ளையாகவும் மாசி முதல் 6 மாதம் வரை கருப்பு நிறமாகவும் இருக்கும். !

சைவர்களின் திருவாதிரையும், வைணவர்களின் வைகுண்ட ஏகாதசியும் ஒரே திருக்கோவிலில் ஒரே மாதத்தில் நடைபெறுவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே. !



இமய மலை சாரலில் உள்ள பத்ரிநாத் கோவிலில் மே மாத முதல் கோவில் நடை திறக்கப்படும். நவம்பர் மாதத்தில் நடை சாத்தப்படும். அப்போது ஏற்றப்படும் தீபம் , கோயில் திறக்கப்படும் மே மாதம் வரை எரியும். !


காசி நகரை சுற்றி 45 மைல் தொலைவு எல்லை வரை கருடன் பறப்பதில்லை.!



(செவி  செய்திகள் ...)

Wednesday, June 27, 2018

மகா பாரதமும் வாழ்க்கையும்





மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- ஷாந்தனுவாய் ....

சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில்
மாட்டிடுவாய்
- கங்கை மைந்தனாய் ......

முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்
-பாண்டுவாய் ......

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
-சகுனியாய் .....

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
-குந்தியாய் .....

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
- திருதுராஷ்டிரனாய் .....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
-கௌரவர்களாய் .....

கூடா நட்பு கேடாய் முடியும்
-கர்ணனாய் ......

சொல்லும் வார்த்தை கொல்லும்  ஒரு நாள்
-பாஞ்சாலியாய்....

தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய் .......

பலம் மட்டுமே பலன் தராது
பீமனாய் .....

இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
-அர்ஜூனனாய் ....

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகதேவனாய் .......

விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
-அபிமனியுவாய் ......

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கினான்
-கண்ணனாய் .....

வாழ்க்கையும் ஒரு பாரதம் தான் ...வாழ்ந்து பார்ப்போம் ....




-

Saturday, June 23, 2018

பீட்டர் பாதுகை

 




கி. பி 1812 முதல் 1828 வரை மதுரையின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவர்  ரோஸ் பீட்டர் என்னும் ஆங்கிலேயர் ஆவார்.

திரு பீட்டர் அவர்கள் கிறிஸ்தவராக இருந்தாலும் எல்லா மதத்தினரையும் மதிப்பவராக விளங்கினார். இவரே மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். இவரின் அரிய குணங்களைக் கண்டு மக்கள் இவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தார்கள்.

மீனாட்சி அம்மன் ஆலயம் இவர்  வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே அமைந்திருந்தது. தினமும் அவ்வழியாக அலுவலகத்துக்கு செல்லும் போது , திரு. பீட்டர் தன்னுடைய காலணிகளை கழற்றி விட்டு கோயிலை கடந்த பிறகு மீண்டும் அணிந்து குதிரையில் செல்வார். தினமும் இதை  கடைபிடித்து வந்தார்.

ஒரு நாள் இரவு  நல்ல மழை. திரு பீட்டர் அவர்கள் தன் பங்களாவில் படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காதில் விழுந்த கொலுசு சத்தம் அவரின் உறக்கத்தைக் கலைத்தது.கொலுசு சத்தம் அவருக்கு மிக அருகில் வர, விழித்து நோக்கிய போது, சிறு பெண் பட்டு பாவாடை மற்றும் விலையுர்ந்த பொன்னாபரணைகளுடன் காலில் கொலுசு அணிந்து மிக அருகில் நிற்கக் கண்டார்.

அச் சிறுமி அவரை நோக்கி "பீட்டர் என் பின்னால் வா' என்றழைத்து விட்டு நடக்க ஆரம்பித்தது. கால்களை நோக்கிய பீட்டர் அச் சிறுமி காலணிகள் அணியவில்லை என்பதை உணர்ந்தார். கொலுசு மட்டும் அணிந்திருந்த கால்களின் நடையைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெகு தூரம் வந்து விட்டார்.திடுக்கிட்ட பீட்டர் அவர்கள் சற்று திரும்பி வீட்டை பார்த்த போது, வீடு முற்றும் வெள்ளம் அடித்துச் செல்வதை பார்த்து அதிர்ந்து நின்றவர் முன்னாள் நடந்து சென்ற சிறுமியை நோக்கினார். என்ன ஆச்சிரியம் .....அங்கு அச்சிறுமியை காணவில்லை...

அன்னை மீனாட்சி தான் சிறுமியின் உருவில் வந்து தன்னை காப்பாற்றியதை உணர்ந்தார் திரு பீட்டர். சிறுமி உருவத்தில் வந்த மீனாட்சி காலணி அணியவில்லை என்பதை மனதிற்கொண்டு பொன்னாலான காலணிகளை காணியாகையாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கினார்.அக்காலணியில் 
                            
                                412- ரூபி 
                                  72 - எமரால்டு 
                                  80 - வைரங்கள்
பாதிக்கப்பட்டிருந்தன.

இது நடந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி அம்மன் அக்காலணிகளை  அணிந்து இன்றும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்காலணிகள் "பீட்டர் பாதுகை " என்றே  அழைக்கப்படுகிறது.


   பக்திக்கு மதம் தடையில்லை ..... உணர்வார்களா ... இன்றிருப்பவர்கள்....





காலத்தின் கோலங்கள் ..



இளமை காலம் ..

1. சக்தி இருக்கும்
2. நேரம் இருக்கும்
3. பணம் இருக்காது .....


உழைக்கும் காலம்

1. பணம் இருக்கும்
2. சக்தி இருக்கும்
3. நேரம் இருக்காது .....

முதுமை காலம்


1. நேரம் இருக்கும்
2. பணம் இருக்கும்
3. சக்தி இருக்காது .......

மறந்து விட்டோம் ...



வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி வந்தபிறகு
புத்தகங்கள் படிப்பதை மறந்து விட்டோம் ...

கதவருகே கார் வந்தபிறகு
நடப்பதை மறந்து விட்டோம் ...

கைகளில் கைப்பேசி வந்தபிறகு
கடிதங்கள் எழுதுவதை மறந்து விட்டோம் ...

கணினி  வந்தபிறகு
சொல்வது எழுதுவது மறந்து விட்டோம் ...

வீட்டிற்கு குளிர்சாதன பெட்டி வந்தபிறகு
மர நிழலின் குளிர்ச்சியை மறந்து விட்டோம் ...

பெரு நகரங்களில் வந்தபிறகு
மண்வாசனைய  மறந்து விட்டோம் ...

வங்கி கணுக்கில் வரவு செலவிற்கு அட்டை வந்தபிறகு
பணத்தின் மதிப்பை மறந்து விட்டோம் ...

செயற்கையான வாசனை திரவியங்கள் வந்தபிறகு
உண்மையான மலர்களின் நறுமணத்தை மறந்து விட்டோம் ...

துரித உணவககங்கள் வந்தபிறகு
பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டோம் ...

சுற்றி சுற்றி ஓடி கொண்டிருக்கும் நாம்
நிற்பதை  மறந்து விட்டோம் ...

கடைசியாக  " வாட்ஸஅப் " வந்தபிறகு
எப்படி பேசுவது என்பதை மறந்து விட்டோம் ...


மறதியில் மறைவத்திற்கா வாழ்க்கை......


...படித்ததில் பிடித்தது ....

Monday, March 19, 2018

கோலம்-3











படித்ததில் பிடித்தது





அண்டங்கள் ஆகாயங்கள்
இயற்கை !
வானும் விண்மீன்களும்
இயற்கை !
சூரியனும் ஒளியும்
இயற்கை !
அதைச் சுற்றிவரும் கிரகங்களும்
 இயற்கை !
காற்றும் மழையும்
 இயற்கை !
நீரும் நிலமும்
 இயற்கை !
நிலநடுக்கமும்
இயற்கை !
ஆறுகள் கடல்கள் அருவிகள்
இயற்கை !
வறட்சியும் பசுமையும்
 இயற்கை !
அவற்றின் பிறப்பும் இறப்பும்
 இயற்கை !
உயிரும் உடலும்
 இயற்கை !
இறைவனின் படைப்பில்
ஓவ்வொன்றும்  இயற்கை !
அவற்றின் மாட்சியும் மகிமையும்
இயற்கை ! இயற்கை !


         இயற்கையின் வடிவில் யாவும் இருக்க ...
         மனிதனின் மனம் மாத்திரம் ஏன் ...செயற்கையாய் இருக்கிறது ?







 

Saturday, March 10, 2018

கோலம் 



கோலம் 
தமிழரின் வாழ்வில் பின்னி பிணைந்த வார்த்தை கோலம் . நம் கலாச்சாரத்தின்  மிக அழகான  விஷயம் கோலம். இல்லங்களின் முகப்பில் அலங்கரிக்கும் கோலங்கள் உள்ளங்களை வசீகரிக்கும்  என்பது மட்டுமல்ல, நம் கலாச்சாரத்தின் அழகும் கூட. நம்  கோவில்களின் பிரகாரங்களில் மட்டுமல்ல, சுவர்கள் மற்றும் மேல்  விதானங்களில்  தீட்டபட்டிருக்கும் கோலங்கள் கோவில்களின்  அழகை மேலும் மெருகேற்றி  வருகிறது என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.
தொன்மை காலம் தொட்டே நம் வாழ்க்கை நிழ்வுகளோடு வந்து கொண்டிருப்பது கோலங்கள். 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோலம் என்கிறார்கள் மானுடவியல் ஆய்வாளர்கள். மிகப் பபழைமையான திராவிட கலாச்சாரத்தின் பின்னணி கொண்டது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஒரு அங்கமாகவே இருக்கிறது. தர்மம் என்பது எல்லா உயிரனங்களுக்கும் சேவை செய்வது . அரிசி மாவினால் கோலமிடுவதன் மூலம் எரும்புகள், பறவை இனங்கள் இவைகளுக்கு உணவிடுப் படுவதாக நினைத்தார்கள் நம் முன்னோர்கள் .பூமித் தாய்க்கு சமர்ப்பனகாவும் எண்ணினார்கள்.

    படங்களோ, சிலைகளோ வீட்டுப் புழக்கத்தில் இல்லாத காலத்தில் வீட்டிற்குள் தெய்வத்தை திருநிலை கொள்ள வைப்பதற்கு குத்துவிளக்கு மட்டுமே இருந்தது. குத்துவிளக்கும் மனைப்பலகை அல்லது மன்னால் செய்த சிறு பீடம் அல்லது கோலத்தின் மீது தான் வைக்கப்பட்டது .

   கோலம் இடப்பட்ட இடங்களை சங்க இலக்கியங்கள் 'களம் ' என குறிப்பிடப்படுகின்றன . இத்தகைய "களங்கள் " அக்காலத்தில் பூசாரி  வெறியாடும் களமாக அமைந்தன.  " களமெழுத்து" என்பது தூய்மை செய்யப்பட்ட இடத்தில்  வரையப்பட்ட கோலத்தையே குறிக்கின்றன. " சர்ப்பந்துள்ளல் ' போன்ற வழிப்பாட்டு நடனங்கள் பல வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட களத்தின் மீதே நடத்தப்படுகின்றன .

    இலக்கிங்கள் குறிப்பிடும் ' களன்  இழைத்தல் " என்ற சொல் தமிழ் நாட்டில் இன்றுமறைந்து விட்டது . அதற்கு மாற்றாகவே அழகு படுத்துதல் , ஒப்பனை செய்தல் என்ற பொருளுடைய கோலம் என்ற சொல் பழக்கத்தில் வந்துள்ளது. தலைவாசல் கோலம் என்பது மேலிருந்து இறங்கும் தெய்வம் மண்ணில் கால் பதிப்பதிற்கு இடப்பட்ட முதல் கோலமாகும் . வீட்டிற்குள் இடப்படும் கோலம் தெய்வத்தை  திருநிலைப்படுத்த இடப்பட்டதாகும்.

      வியாசர் எழுதியாகக் கருதப்படும் 'வராக புராணத்தில் ' வாசல் தெளித்து கொள்மிடுவதைப் பற்றிக்  கூறி இருக்கிறார். பகலவன் (சூரியன்) எழு முன்னே வாசலைப் பெருக்கி பசுன்சான  நீரால் தெளித்து கொலமிடுவதன் மூலம் இந்தப் பிறவியின் துன்பத்தை நீக்கலாம் என்கிறார் வியாசர். வைகுண்டத்தில் திருமகளும் கொலமிடுவதாக வியாசர் தன வராக புராணத்தில் குறிப்பிடுகின்றார்.  

   கோலம் பலவகைப்படும் . பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக்கோலம், பாம்புக் கோலம், மனைக் கோலம், கம்பிக் கோலம், தந்த்ரிக் கோலம், புள்ளிக் கோலம் என பலவகைப் படும்.

     காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உடலின் ரத ஓட்டத்தை சிராக்கும் . மேலும் இது ஒரு யோகாசனமும் கூடஇடுப்பை வளைத்து , கால்களை நேராக்கி, தலையை குனிந்து கோலமிடுதல் ஒரு யோகாசனம் ஆகும். மேலும் கோலமிடும் போது கண்கள் புள்ளிகளை கூர்ந்து கவனிப்பதால் பார்வையும் கூர்மையாகிறது. கற்பனை வளம், கணிதத் திறமையும் வளரும்.

       கோலத்தோடு தொடர்புடைய பல சுவையான செய்திகளும் உள்ளன. செட்டி நாட்டு பகுதிகளில் நடைபெறும் திருமணங்களில் உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடுகின்ற நாளன திருமணத்திற்கு முதல் நாள் வீட்டுத் தலைவாசலில் ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்று கூடி 'நடு வீட்டுக் கோலம்' என்று ஒரு கோலமிடுவது வழக்கம். அதன் மீது பெண், மாப்பிள்ளையை நிற்க வைத்து ஆர்த்தி எடுப்பார்.

    தும்பு பிடிப்பது என்று நேர்கோடாக ஒரு கோலம் இடுவார்கள். வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்தக் கோலம் விளக்குறது.
திருமண வீட்டில் இடும் நாடு வீட்டுக் கோலத்தைச் சுற்றி தவறாமல் புள்ளி வைக்க வேண்டும். புள்ளிகள் குழந்தை செல்வத்தை  குறிப்பதாகும். திருமணத்திற்கு பிறகு குளம் தழைக்க வேண்டும் என்பதற்காகவே புள்ளிகள் இடப்படுகின்றன. வாழ்க்கை கோபுரம் போல உயர வேண்டும் என்பதற்காகத் தான் நான்கு கோடுகளை ஒரு சதுரமாக இணைக்கிறார்கள்.

     கோலம் என்றால் 'அழகு ' என்று பொருள். வீட்டை அழகுபடுத்தினால் மகிழ்ச்சி குடியேரும். மனதை அழகுபடுத்தினால் இறைவன் குடியேறுவான்.
     ஒவ்வொரு விழாக்களையும் கொண்டாடும் போது, அதற்குரிய சிறப்பான கோலங்களும் உள்ளன. தீபாவளி, கார்த்திகை, பொங்கல், கிருஷ்ணா ஜெயந்தி என ஒவ்வொரு பண்டிகைக்கும் கோலங்கள் உள்ளன. கிருஷ்ணா ஜெயந்திஅன்று குழந்தையின் பாதங்கள் வெளியில் இருந்து உள்ளே வருவது போல மாக்கோலம் இடுவது அப்பன்டிகையின் மிகச் சிறப்பான விஷயம் ஆகும். துளசி மாடகோலம்,நவக்கிரககக் கோலம், கலசபூஜைக்கோலம், கணபதி ஹோமம் கோலம்.. இவையல்லாம் நம் விழாக்களோடு தொடர்புடையக்  கோலங்கள்.

    வீதிகளில் சுவாமி திருவீதி உலா வரும் போது, சுவாமியை வரவேற்க இல்லங்களில் (வீட்டின் முன்) முன் வாசலில் கோலமிட்டு வரவேற்பது இன்றும் நடை முறையில் உள்ள செய்தி. குல தெய்வம் சன்னதியில் மாகோலம் இட்டு, அதன் மீது மா விளக்கு ஏற்றி வைத்து வழி பட்டால் போர்க் கோலம் மாறும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கோலம் இடுவதற்கான சில இதி முறைகளும் சுவையாகவே உள்ளன .


  •    சூரியன் உதிக்கும் முன்பே பசும்சானம் தெளித்து, கோலமிட வேண்டும்மாலையில் சூரியன் மறையும் முன்பே நீர் தெளித்து கோலமிடவேண்டும் .
  • தெற்கு பார்த்தோ, முடியும் படியோ இடக் கூடாது.
  • கோலம் போட்டு செம்மண் (காவி) இடுவது மும் மூர்த்திகளை குறிப்பது ஆக  கூறப்படுகிறது.
  • பசும் சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், வெண்மை பிரம்மாவையும், காவி சிவனையும் குறிக்கிறது.
  • கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் பெருகும்.
  • திங்கள்- அல்லி கோலம் , வியாழன்- துளசி மாட கோலம் , வெள்ளி - எட்டு இதழ் தாமரைக்கோலம்,சனி - பவளமல்லி கோலம் , பவுர்ணமி- தாமரைகோலம்  இட்டால் விசேஷம்
  • வீடு சுவரை ஒட்டி போடும் கரை (பார்டர்) கோலங்கள் தீய சக்தியை உள்ளே விடாது என்பது நம்பிக்கை.
  • இடது கையால் கொலமிடக்கூடாது : உட்கார்ந்து கோலமிடக்கூடது.
  • கணவர் வெளியில் செல்வதுற்கு முன்பே கோலம் போட வேண்டும்.
   
           கோலத்தை பற்றியும், அதன் வரலாற்றைப் பற்றியும் "சத்குரு'' அவர்கள் சில சுவையான செய்திகளை கூறி இருக்கிறார். மார்கழி மாதத்தில் மட்டும் கோலம் ஏன் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது? இதற்குரிய சில விளக்கங்களையும் "சத்குரு'' அவர்கள் கூறியிருக்கிறார். செய்திகளின் சாரம் இதோ ....
           கோலம் என்பது அலங்காரதிர்காகப் போடப்போடுவதல்ல... இது ஓர் விதமான் வடிவம். படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவம் தான். அடிப்படியான வடிவம் முக்கோண வடிவம் ஆகம். இதை எந்திரம் என்றும் சொல்லலாம். சரியான முறையில் உருவங்கள் இணைந்தால் அது எந்திரம்.
             இந்த பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து ஒரு மகத்தான பிரம்மாண்டமான எந்திரமாக  இருக்கிறது. நம் உடல் கூட ஒரு யந்திரம் தான். இந்த உடல் என்னும் எந்திரத்தை நுட்பமாக கவனித்தாலே ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும் பூமியின் சக்தி சூழ்நிலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணரமுடியும்.நமது கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்தரமாகத்  தான் உருவாக்கினர். ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப் பார்க்கின்றனர்.
            புத்த மடாலயங்களில் ஒரு கோலத்தை பத்து  பேர் காலையிலிருந்து மாலை வரை போடுவார்கள். தொடர்ந்து 3,4 மாதங்கள் வரை அந்தக் கோலத்தை வரைவார்கள். ஒரு கோலம் வடிவத்தைப் பொருத்தும் அதில் பயன்படுத்தும்  பொருட்களைப் பொருத்தும் வெவ்வேறு விதங்களில் செயல்படும். தாந்திரீக முறைப்படி பூஜை செய்யும் போது பெரிய கோலங்கள் இடப்படும். கேரளாவில் இதனை நாம் பார்க்க முடியும்.பல விதமான பலன்களுக்கு பல விதமான கோலங்களைப் போடமுடியும். அதில் ஒன்று மாட்டு சாணம் தெளித்து அதன் மேல் கோலம் இடுவது , அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி இருக்கிறது.

        வருடம் முழுவதும் கோலமிட்டாலும், மார்கழி மாதத்தின் கோலங்களை மறக்க முடியுமா ? மார்கழி மாதத்தில் கோலங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

       மார்கழி மாதத்தில் தான் சூரியன் தக்ஷ்னயனதிலிருந்து (தெற்கிலிருந்து) உத்தராயனத்திற்கு (வடக்கிற்கு)நகர்கிறான். அதாவது டிசம்பர் முதல் மே மாதம் வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் மாதத்தில் இருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான். சூரியன் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும் பொது பூமியனுடைய சக்தி, சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

        மகாபாரதத்தில் , பீஷ்மர் தன உடலில் அத்துணை அம்புகள் தைத்திருந்த போதும், தன் உயிரை உத்திராயனத்தில் தான் துறக்க வேண்டும் என்று விடமால் பிடித்து வைத்திருப்பார். உத்திராயனத்தில்உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
         உத்திராயணம் தொடங்கும் பொது பூமியில் குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. தமிழ்நாடு , ஆந்திரா , கர்நாடாக போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில் தான் உள்ளன. இந்த மாற்றங்கள் நிகழ்கின்ற போது அதனை பயன்படுத்திக் கொள்ள பல கருவிகள் உருவாக்கப்பட்டன.யோகா முறையிலும் பல விதமான பயிற்சிகள் வகுக்கப்பட்டன. குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்த சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். மார்கழி முதல் கோலத் திருவிழா தையில் பொங்கல் முடியும் வரை தொடர்கிறது.

          ஜப்பானில், புள்ளிக் கோலங்களை முறைபடுத்தி அந்நாட்டு கல்விக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.
    தொன்மை தெனிந்தியாவில் பெரிய அளவில் பேசப்படும் கோலங்கள் இடத்திற்கேற்ப வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கோலம், ஆந்திராவில் முக்குலு, கர்நாடகாவில் ஹசே , ரங்கோலி, மகாராஷ்ட்ராவில் ரங்கோலி, கேரளாவில் கோலம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல இந்தோனோஷியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சில ஆசியா நாடுகளிலும் கோலமிடும் வழக்கம் பரவியிருக்கிறது.

     இப்போது அரிசி மாவினால் கோலமிடு வழக்கம் குறைந்திருந்தாலும், மலிவாக கிடைக்கக் கூடிய சாக் பௌடர், வெள்ளை கற்களால் பொடியக்கப்பட்ட மாவினால் கோலங்களை இடுகின்றனர்.

     தினசரி கோலங்கள், பண்டிகைக் கோலங்கள், விழாக்கால  கோலங்கள், நவக்கிரக கோலங்கள் என்று கோலங்களை வகைப்படுத்தினாலும் கோலங்களில் பல வகைகளில் வகைப்படுத்தி பார்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

     கம்பி கோலங்கள் , இழைக் கோலங்கள், வண்ணக்கோலங்கள், படிக்கொலங்கள், மாகோலங்கள், நீர் கோலங்கள் , புள்ளி இல்லா கோலங்கள் என்று பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகிறது கோலங்கள்.

      புள்ளி இட்டு ஒரு புள்ளியில் ஆரம்பித்து அனைத்து புள்ளிகளையும் இழைகளால் இணைக்கும் இவ்வகைகக் கோலங்களை கம்பி கோலங்கள் அல்லது சிக்குக் கோலங்கள் என்றழைக்கப்படுகிறது.(இடையில் தவறு நேர்ந்தால் சரி செய்வது சற்றுக் கடினமே.

   புள்ளி வைத்து பூக்கள் (அல்லது) வடிவங்கள் வரைந்து அதில் வண்ணங்களை சேர்த்து அழகு பார்ப்பது பூக்கோலங்கள் அல்லது வண்ணக் கோலங்கள் எனலாம்.
   படிப் படியாய் வடிவம் இட்டு , ஓரங்களில் செம்மண் கரையிட்டு பண்டிகைக் களங்களில் இடுவது படிகொலங்கள்.
    பச்சரிசியை 1 அல்லது 2 மணி நேரம் உறவைத்து, பின் அரைத்து  அடர்த்தியாக நீரில் கரைத்து, சிறிய துணி அல்லது பிரஷால் தொட்டு கோலங்கள் இடுவது மாக்கோலம் ஆகும்இக்கோலங்கள் கலையாமல் ஒரு வாரம் கூட இருக்கும்.சிலர் அரிசி மாவு கரைசலில் மைதா மாவு அல்லது உளுந்து மாவு கலப்பது உண்டு. இழை இழையாய் கோலமிட்டு, ஓரங்களில் செம்மண் இடுவது காண வெகு அழகாய் இருக்கும்.

    தட்டுகளில் அழகாய் கோலம் இட்டு (அழியாத கோலம்) அதன் மேல் நீர் உற்றி இடுவது நீர் கோலங்கள். இக் கோலங்கள் வெகு சிலரே குடும்ப விழாக்களில் இடுகின்றனர்.

   புள்ளி இல்லா கோலங்கள் (ப்ரீ ஹான்ட் ) வண்ணமிட்டு வண்ணக் கோலங்களாக மாறும் போது கண்களுக்கு குளிர்ச்சியாக மாறுகிறது. இவ்வகைக் கோலங்கள் வண்ணப் பூக்களால் அலங்கரித்து,அழகு படுத்தி பார்க்கும் கேரளா மக்கள் மத்தியில் இது 'அத்திப்பூ  கோலங்கள்' என்றைழைக்கப்படுகிறது. ஓணம்  பண்டிகையின் விசேஷமான கோலங்கள் இவ்வகை அத்திப் பூ கோலங்களே.

வட இந்தியாவில் கோலம் ரங்கோலி என்றைழக்கப் படுகிறது. வண்ணப் பொடிகள் கொண்டு கோலமிடும் பழக்கம் இங்கிருந்தே பரவியது.

    காலத்தின் மாற்றத்தால் இப்பொழுது கோலமிடும் பழக்கம் குறைந்து வருகிறது. வாசல் புறமும் முற்றங்களும் மறைந்து விட்டன. நேரமில்லை என்று மக்கள் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் 'ஸ்டிக்கர்' கோலங்கள் கடைகளில் வந்து விட்டன. எவ்வளவு பெரிய கோலத்தையும் சுருக்கி சிறிய அளவில் ஓட்டும் வழக்கம் பரவி விட்டது. தனி வீடுகள் காணாமல் போய் அடுக்கு மாடி வீடுகள்  வந்து விட்ட பெருநகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் உள்ள வீடுகளின் சிறு வாசலிலே இந்த வகை 'ஸ்டிக்கர்' கோலங்கள் அமர்ந்திருக்கின்றன.

     குந்தன் கற்களால் ஆன அலங்காரமான கோலங்களும் கடைகளில் வந்து விட்டன. பிளாஸ்டிக் பேப்பரில் கோலம் வரைந்து பின் குந்தன் கற்களால் அலங்கரித்து விற்கப்படும் கோலங்கள் நீண்ட நாட்கள் பயன் பாட்டில் வைத்துக் கொள்ளலாம். சிறது  சிறிதாக செய்து  கோலங்கள் வேறு வேறு விதமாக சேர்த்து அலங்காரமாகவும் இட முடியும் ."தசரா' சமயங்களில் பூம்மைக் கொலுவில் இப்போழுதல்லாம் இவ்வகைக் கோலங்களை கட்டாயம் காணலாம்.

  இயந்திர யுகத்தில் மக்கள் மன நிலையும் இயந்திரமாகத் தான் இருக்கின்றன. உலகமே கையில் வந்து விட்ட நிலையில் பலவற்றை நாம் இழந்து தான் வருகின்றோம். எக்கால கட்டத்திலும் பெண்களே கலாச்சாரத்தின் பாலமாகவே இருக்கிறார்கள். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கும் கோலங்கள் கூட நம் கலாச்சாரத்தின் ஓர் அடையாளமாகவே இருக்கிறது. இடமும், காலமும் இல்லாமல் இருக்கலாம். மனமிருந்தால் போதும். இதும் ஒரு கலை தான். அவசர உலகத்தில் கோலமிடுதல் மன அழுத்தத்தை கண்டிப்பாக குறைக்கும். மன உளைச்சலையும் அகற்றும். வீட்டின் முன் வாசலில் இடம் சிறியதாக இருந்தாலும் சிறு கொலமிடுங்கள். மகிழ்ச்சியுடன் வைக்கும் உங்கள் உள்ளங்கள ....

  எலெக்ட்ரானிக் யுகத்தில், இதற்கு மென்பொருளும் வந்த விட்டது. வலை தளங்களில் கொட்டிக் கிடந்தாலும், நம் மனத்  தளங்களுக்கு கொண்டு வருவோம். கோல அச்சுகள் அதிகம் வந்து விட்டாலும், அதைக் கொண்டே கோலங்களை மெருகேற்றுவோம். அச்சுகள் இட்டு அதைச் சுற்றியோ அல்லது அங்கமாகக் கொண்டோ, புதுக் கோலங்களை படைப்போம். நம் பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்துவோம்.புதுப் பொலிவோடு நம் அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோம்.