Friday, June 29, 2018

உணவு பழக்கம்- பழமொழி வடிவில்





  • சீரகம் இல்லா உணவு சிறக்காது.
  • தன்  காயம் போக்க வெங்காயம் போதும்.
  • வாழை வாழ வைக்கும்.
  • அவசர சோறு ஆபத்து.
  • இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
  • இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை.
  • இருமலை போக்கும் வெந்தயக்கீரை.
  • உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
  • உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.
  • கல்லீரல் பலம் பெற கொய்யா பழம்.
  • கொழுப்பைக் குறைக்க பன்னீர் திராட்சை.
  • சித்தம் தெளிய வில்வம்.
  • சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.
  • சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.
  • ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
  • தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
  • தேனுடன் இஞ்சி இரத்தத்  தூய்மை .
  • பூண்டில் இருக்கு இன்சுலின்.
  • மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
  • வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
  • வாத நோய் தடுக்க அரைக்கீரை.
  • வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
  • பருமன் குறையமுட்டைகோஸ்.
  • பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
  • குடல் புண் ஆற அகத்திக்கீரை.             ...   வாழ்க நலமுடன்.....

Thursday, June 28, 2018

தெரியாத செய்திகள்






மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக்  குளத்தில்
மீன்கள் வளராது.!

திருவண்ணாமலைத்  திருக்கோவிலில் சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வெளியே
வருவதில்லை. மாறாக, பக்கத்தில் உள்ள திட்டி வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

எல்லாத் தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு சக்கரம் இருக்கும்.
ஆனால் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோயிலில் மட்டும் பெருமாளின் வலது கையில் சங்கு உள்ளது. !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரே இடத்தில் நின்று திரு கோவிந்தராஜப்பெருமாளையும் நடராஜரையும் தரிசிக்க முடியும்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இத்தனை கோபுரங்கள் இல்லை. !


கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் உள்ள திரு ஒப்பிலியப்பன் கோவிலில் ஸ்வாமிக்கு படைக்கும் செய்யும் எந்த உணவிலும் உப்பு சேர்ப்பதில்லை.!

ராமநாதபுரம் ராமேஸ்வரம் சிவன் கோயிலில் பெருமாள் சன்னதியில் கொடுப்பது போல தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. !

ஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. இதை தட்டினால் வெண்கல ஓசை கேட்கிறது.!

ரத்தினகிரி மலை முருகனுக்கு அபிஷேகம்  செய்யப்படும் பால் சிறிது நேரத்தில் தயிராக
மாறிவிடுகிறது. !

மூலவரே திருவீதி உலா வருவது சிதம்பரம் நடராஜர் மட்டுமே.!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் உள்ள கேரளபுரத்தில் சிவபெருமான் கோயில் உள்ளது.இக் கோவிலில் அரசமரத்தடியில் உள்ள பிள்ளையார் நிறம் மாறுபவராக உள்ளார். நிறம் மாறும் சந்திர காந்தக் கல்லினால் உருவாக்கப்பட்டது இச்சிலை. ஆவணி முதல் 6 மாதங்கள் வெள்ளையாகவும் மாசி முதல் 6 மாதம் வரை கருப்பு நிறமாகவும் இருக்கும். !

சைவர்களின் திருவாதிரையும், வைணவர்களின் வைகுண்ட ஏகாதசியும் ஒரே திருக்கோவிலில் ஒரே மாதத்தில் நடைபெறுவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே. !



இமய மலை சாரலில் உள்ள பத்ரிநாத் கோவிலில் மே மாத முதல் கோவில் நடை திறக்கப்படும். நவம்பர் மாதத்தில் நடை சாத்தப்படும். அப்போது ஏற்றப்படும் தீபம் , கோயில் திறக்கப்படும் மே மாதம் வரை எரியும். !


காசி நகரை சுற்றி 45 மைல் தொலைவு எல்லை வரை கருடன் பறப்பதில்லை.!



(செவி  செய்திகள் ...)

Wednesday, June 27, 2018

மகா பாரதமும் வாழ்க்கையும்





மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- ஷாந்தனுவாய் ....

சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில்
மாட்டிடுவாய்
- கங்கை மைந்தனாய் ......

முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்
-பாண்டுவாய் ......

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
-சகுனியாய் .....

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
-குந்தியாய் .....

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
- திருதுராஷ்டிரனாய் .....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
-கௌரவர்களாய் .....

கூடா நட்பு கேடாய் முடியும்
-கர்ணனாய் ......

சொல்லும் வார்த்தை கொல்லும்  ஒரு நாள்
-பாஞ்சாலியாய்....

தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய் .......

பலம் மட்டுமே பலன் தராது
பீமனாய் .....

இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
-அர்ஜூனனாய் ....

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகதேவனாய் .......

விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
-அபிமனியுவாய் ......

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கினான்
-கண்ணனாய் .....

வாழ்க்கையும் ஒரு பாரதம் தான் ...வாழ்ந்து பார்ப்போம் ....




-

Saturday, June 23, 2018

பீட்டர் பாதுகை

 




கி. பி 1812 முதல் 1828 வரை மதுரையின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவர்  ரோஸ் பீட்டர் என்னும் ஆங்கிலேயர் ஆவார்.

திரு பீட்டர் அவர்கள் கிறிஸ்தவராக இருந்தாலும் எல்லா மதத்தினரையும் மதிப்பவராக விளங்கினார். இவரே மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். இவரின் அரிய குணங்களைக் கண்டு மக்கள் இவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தார்கள்.

மீனாட்சி அம்மன் ஆலயம் இவர்  வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே அமைந்திருந்தது. தினமும் அவ்வழியாக அலுவலகத்துக்கு செல்லும் போது , திரு. பீட்டர் தன்னுடைய காலணிகளை கழற்றி விட்டு கோயிலை கடந்த பிறகு மீண்டும் அணிந்து குதிரையில் செல்வார். தினமும் இதை  கடைபிடித்து வந்தார்.

ஒரு நாள் இரவு  நல்ல மழை. திரு பீட்டர் அவர்கள் தன் பங்களாவில் படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காதில் விழுந்த கொலுசு சத்தம் அவரின் உறக்கத்தைக் கலைத்தது.கொலுசு சத்தம் அவருக்கு மிக அருகில் வர, விழித்து நோக்கிய போது, சிறு பெண் பட்டு பாவாடை மற்றும் விலையுர்ந்த பொன்னாபரணைகளுடன் காலில் கொலுசு அணிந்து மிக அருகில் நிற்கக் கண்டார்.

அச் சிறுமி அவரை நோக்கி "பீட்டர் என் பின்னால் வா' என்றழைத்து விட்டு நடக்க ஆரம்பித்தது. கால்களை நோக்கிய பீட்டர் அச் சிறுமி காலணிகள் அணியவில்லை என்பதை உணர்ந்தார். கொலுசு மட்டும் அணிந்திருந்த கால்களின் நடையைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெகு தூரம் வந்து விட்டார்.திடுக்கிட்ட பீட்டர் அவர்கள் சற்று திரும்பி வீட்டை பார்த்த போது, வீடு முற்றும் வெள்ளம் அடித்துச் செல்வதை பார்த்து அதிர்ந்து நின்றவர் முன்னாள் நடந்து சென்ற சிறுமியை நோக்கினார். என்ன ஆச்சிரியம் .....அங்கு அச்சிறுமியை காணவில்லை...

அன்னை மீனாட்சி தான் சிறுமியின் உருவில் வந்து தன்னை காப்பாற்றியதை உணர்ந்தார் திரு பீட்டர். சிறுமி உருவத்தில் வந்த மீனாட்சி காலணி அணியவில்லை என்பதை மனதிற்கொண்டு பொன்னாலான காலணிகளை காணியாகையாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கினார்.அக்காலணியில் 
                            
                                412- ரூபி 
                                  72 - எமரால்டு 
                                  80 - வைரங்கள்
பாதிக்கப்பட்டிருந்தன.

இது நடந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி அம்மன் அக்காலணிகளை  அணிந்து இன்றும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்காலணிகள் "பீட்டர் பாதுகை " என்றே  அழைக்கப்படுகிறது.


   பக்திக்கு மதம் தடையில்லை ..... உணர்வார்களா ... இன்றிருப்பவர்கள்....





காலத்தின் கோலங்கள் ..



இளமை காலம் ..

1. சக்தி இருக்கும்
2. நேரம் இருக்கும்
3. பணம் இருக்காது .....


உழைக்கும் காலம்

1. பணம் இருக்கும்
2. சக்தி இருக்கும்
3. நேரம் இருக்காது .....

முதுமை காலம்


1. நேரம் இருக்கும்
2. பணம் இருக்கும்
3. சக்தி இருக்காது .......

மறந்து விட்டோம் ...



வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி வந்தபிறகு
புத்தகங்கள் படிப்பதை மறந்து விட்டோம் ...

கதவருகே கார் வந்தபிறகு
நடப்பதை மறந்து விட்டோம் ...

கைகளில் கைப்பேசி வந்தபிறகு
கடிதங்கள் எழுதுவதை மறந்து விட்டோம் ...

கணினி  வந்தபிறகு
சொல்வது எழுதுவது மறந்து விட்டோம் ...

வீட்டிற்கு குளிர்சாதன பெட்டி வந்தபிறகு
மர நிழலின் குளிர்ச்சியை மறந்து விட்டோம் ...

பெரு நகரங்களில் வந்தபிறகு
மண்வாசனைய  மறந்து விட்டோம் ...

வங்கி கணுக்கில் வரவு செலவிற்கு அட்டை வந்தபிறகு
பணத்தின் மதிப்பை மறந்து விட்டோம் ...

செயற்கையான வாசனை திரவியங்கள் வந்தபிறகு
உண்மையான மலர்களின் நறுமணத்தை மறந்து விட்டோம் ...

துரித உணவககங்கள் வந்தபிறகு
பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டோம் ...

சுற்றி சுற்றி ஓடி கொண்டிருக்கும் நாம்
நிற்பதை  மறந்து விட்டோம் ...

கடைசியாக  " வாட்ஸஅப் " வந்தபிறகு
எப்படி பேசுவது என்பதை மறந்து விட்டோம் ...


மறதியில் மறைவத்திற்கா வாழ்க்கை......


...படித்ததில் பிடித்தது ....