Friday, March 2, 2018

மனம்

மனம் 

சிற்பி ஒருவன் சிந்தித்தான் ..தான்  வறியவன் பலமற்றவன் என்று ..

சூரியனே பலமானவன் என்று 
..
ஆக நினைத்தான் சூரியனாய் ..

மாறினான்  சூரியனாய் வானில் ..

மகிழ்ந்தான்  தன்னை விட பலமானவன் இல்லை என்று ..

மிதந்து தவழ்ந்து வந்த மேகங்கள் ..மறைத்தது சூரியனை ..

சிற்பி சூரியன் நினைத்தான் ..நம்மையே மறைத்த மேகங்களே ..

பலமுள்ளது என்று..

மாறினான் மேகங்களாய் ....மேதாவியாய்  நினைத்து மிதந்து கொண்டிருந்தான்..

மேகங்களை முட்டியது  மலை  முகடுகள் ...

மழையாய் மாறின மேகங்கள்...

முட்டிய மலையே மேன்மையானது ..நினைத்தான் மேக  சிற்பி ...

நினைத்தவுடன் மாறினான் மலைகளாய்....

எங்கோ ஒலித்தது  உளியின் ஓசை ...மலையாய் நின்ற சிற்பி ..

நினைத்தான் ..ஆஹா .. மலையையே அசைக்கும் ..

அம்மனிதன் அல்லவா ..பெரியவன் ..பலமாவான் ..

மாறினான் பழைய சிற்பியாய் .....

No comments:

Post a Comment