திருவள்ளுவரின் வள்ளுவம்
தமிழ் - இது ஒரு அழகான , இனிமையான மொழி மட்டுமல்ல மிகவும் பழமையானதும் கூட .
" யாதும் ஊரே யாவரும் கேளீர் "
என்று உலகுக்கு உணர்த்திய மொழி , உலகில் உள்ள பழைய மொழிகளில் தமிழ் ஒன்றே இன்றளவும் மக்களால் பேசப்படும் மொழி.
எண்ணிலடங்கா இலக்கியங்களும், காவியங்களும் தமிழ் மொழியில் குவிந்துகிடந்தாலும் 'உலகப்பொதுமறை ' என்று புகழப்படும் வள்ளுவத்தை பெற்றுருப்பது நமது மொழியின் தனிச்சிறப்பு எனலாம் .
இது ஒரு மானுடவியல் எனலாம் , வாழ்க்கையை அறம் , பொருள் , இன்பம் என்று மூன்றாக பிரித்து நான்கவதாகக் கூறப்படும் வீடு பேற்றை அடைய உதவும் நூல் எனலாம் .
- பால்-3
- இயல்-13
- அதிகாரம்-133
- குறள் -1330
அறத்தின் வழி நின்று பொருளை சேர்த்து நல்வழியில் இன்பம் பெறுவதை வலியுறுத்திக் கூறுவது திருக்குறள்.
- அறத்திற்கு 38 அதிகாரம்
- பொருளுக்கு 70 அதிகாரம்
- இன்பத்திற்கு 25 அதிகாரம்
இது வாழ்க்கைக்கு வள்ளுவர் வகுத்திருக்கும் அதிகாரம்.
இது ஓர் அறிமுகம் தான் ,,,,தொடரும் என் எழுத்துகள் .....
No comments:
Post a Comment