மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில்
மீன்கள் வளராது.!
திருவண்ணாமலைத் திருக்கோவிலில் சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வெளியே
வருவதில்லை. மாறாக, பக்கத்தில் உள்ள திட்டி வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
எல்லாத் தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு சக்கரம் இருக்கும்.
ஆனால் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோயிலில் மட்டும் பெருமாளின் வலது கையில் சங்கு உள்ளது. !
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரே இடத்தில் நின்று திரு கோவிந்தராஜப்பெருமாளையும் நடராஜரையும் தரிசிக்க முடியும்.!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இத்தனை கோபுரங்கள் இல்லை. !
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் உள்ள திரு ஒப்பிலியப்பன் கோவிலில் ஸ்வாமிக்கு படைக்கும் செய்யும் எந்த உணவிலும் உப்பு சேர்ப்பதில்லை.!
ராமநாதபுரம் ராமேஸ்வரம் சிவன் கோயிலில் பெருமாள் சன்னதியில் கொடுப்பது போல தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. !
ஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. இதை தட்டினால் வெண்கல ஓசை கேட்கிறது.!
ரத்தினகிரி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் சிறிது நேரத்தில் தயிராக
மாறிவிடுகிறது. !
மூலவரே திருவீதி உலா வருவது சிதம்பரம் நடராஜர் மட்டுமே.!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் உள்ள கேரளபுரத்தில் சிவபெருமான் கோயில் உள்ளது.இக் கோவிலில் அரசமரத்தடியில் உள்ள பிள்ளையார் நிறம் மாறுபவராக உள்ளார். நிறம் மாறும் சந்திர காந்தக் கல்லினால் உருவாக்கப்பட்டது இச்சிலை. ஆவணி முதல் 6 மாதங்கள் வெள்ளையாகவும் மாசி முதல் 6 மாதம் வரை கருப்பு நிறமாகவும் இருக்கும். !
சைவர்களின் திருவாதிரையும், வைணவர்களின் வைகுண்ட ஏகாதசியும் ஒரே திருக்கோவிலில் ஒரே மாதத்தில் நடைபெறுவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே. !
இமய மலை சாரலில் உள்ள பத்ரிநாத் கோவிலில் மே மாத முதல் கோவில் நடை திறக்கப்படும். நவம்பர் மாதத்தில் நடை சாத்தப்படும். அப்போது ஏற்றப்படும் தீபம் , கோயில் திறக்கப்படும் மே மாதம் வரை எரியும். !
காசி நகரை சுற்றி 45 மைல் தொலைவு எல்லை வரை கருடன் பறப்பதில்லை.!
(செவி செய்திகள் ...)
No comments:
Post a Comment